அம்பானி மகனின் காலில் விழுந்த ஊழியர்
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தமது நிறுவன ஊழியர்களிடம் மிகுந்த நட்பு பாராட்டுவார். இவர் சமீபத்தில் ஊழியர் ஒருவரின் பிறந்தநாளை தனியார் ஜெட் விமானத்தில் கொண்டாடினார். அவர் ஊழியருக்காக சிறப்பு கேக்கை ஏற்பாடு செய்த நிலையில், தனது முதலாளியின் இனிமையான செயலைக் கண்டு உணர்ச்சிவசப்பட்ட ஊழியர் ஆனந்த் அம்பானியின் காலை தொட்டு வணங்கினார். அவர் காலில் விழும்போது ஆனந்த் அம்பானி தடுக்கவில்லை. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் இது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், நவீன அடிமைத்தனம் என்றும் விமர்சிக்கின்றனர்.
Tags :



















