மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்ற 39 விவசாயிகள் கைது

by Staff / 01-09-2024 03:06:06pm
மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்ற 39 விவசாயிகள் கைது

நாமக்கல்லில் அரசு மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்ற 39 விவசாயிகள் போலீசார் கைது செய்துள்ளனர். விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில், தென்னை மற்றும் பனை மரங்களில் இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு நீக்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் நேற்று (ஆக.31) போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடையை பூட்டுப் போட முயன்றபோது 10 பெண்கள் உள்பட 39 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo