வினேஷுக்கு பாரத ரத்னா/ராஜ்யசபா பதவி? வலுக்கும் கோரிக்கை.
ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு பாரத ரத்னா விருது அல்லது மாநிலங்களவை எம்.பி பதவி கொடுக்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், மமதாவின் அண்ணன் மகனுமான அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார். X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வினேஷின் தியாகத்தையும், உழைப்பையும் யாராலும் மறுக்க முடியாது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்து, அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கிட வேண்டும்” என கூறியுள்ளார்.
Tags :