சீமான்,வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு 

by Editor / 23-02-2023 09:06:26am
சீமான்,வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு 

குறிப்பிட்ட சமூக மக்களைப் பற்றி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி பரிந்துரையின் பேரில் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, கடந்த வாரம் பரப்புரையின் போது, அருந்ததியினர் மக்கள் குறித்து சீமான் பேசியிருந்தார். முன்னதாக, நாதக வேட்பாளர் மேனகா நவநீதன் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
 

 

Tags :

Share via

More stories