வீடுகளில் சோதனை: 9-ரவுடிகள் கைது, ஆயுதங்கள் பறிமுதல்

by Staff / 21-02-2023 01:11:28pm
வீடுகளில் சோதனை: 9-ரவுடிகள் கைது, ஆயுதங்கள் பறிமுதல்

மதுரை நகரில் ரவுடிகள் பட்டியலில் உள்ள 400- பேரின் வீடுகளில் பிப்ரவரி 5- முதல் 19-வரை தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் 5 வாள் 2- கத்தி 1- அரிவாள் கைப்பற்றப்பட்டது.இது தொடர்பாக ஜெய்ஹிந்துபுரம், திடீர் நகர், கூடல் புதூர், அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டியலில் உள்ள பாலாஜி, மெண்டல் கார்த்திக், கருப்பையா என்ற போதகர், சரவணன், நூர்கான், கார்த்திக், விக்னேஸ்வரன் என்ற பெயிண்டர் விக்கி, பழனிக்குமார், மணிகண்டன் என்ற உசிலைமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.தலைமறைவான சிலரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரையில் ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து கைது செய்ய போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories