குற்றால அருவிகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - குளிக்க தடைவிதிப்பு.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நாளைய தினம் சாரல் திருவிழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும், மழைக்குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானவுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க உடனடியாக அனுமதி வழங்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : Sudden flooding at Courtala Falls - bathing prohibited