சபரிமலையில் நவக்கிரக பூஜை என்று நகர்ந்து வந்த ராஜ நாகம்.

பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் கடந்த 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நவக்கிரக பூஜை முடிந்த பிறகு நடை சாத்தப்பட்டிருந்த நிலையில் அங்கு பணியாளர்கள் மட்டும் பணியில் இருந்துள்ளனர் அப்பொழுது சுமார் 2 மணி அளவில் சுமார் 10 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று பதினெட்டாம்படி அருகே ஊர்ந்து வந்து வலது புறத்தில் உள்ள தேங்காய் உடைக்கும் பகுதியில் நின்றுள்ளது இதனை கண்ட கோவில் பணியாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதன் தொடர்ச்சியாக விரைந்து வந்த வனத்துறையினர் ஊர்ந்து சென்ற ராஜ நாகம் பதுங்கி இருந்த பகுதியில் மிகவும் கவனமுடன் அதனை பிடித்து பாதுகாப்பாக அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு விட்டனர் அன்றைய தினம் பக்தர்கள் வருகை இல்லை இதன் தொடர்ச்சியாக வழக்கம்போல் ஆடி மாதம் 17ஆம் தேதி பிறப்பதை முன்னிட்டு 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நவக்கிரக பூஜை நடந்த காலகட்டத்தில் சபரிமலை சன்னிதானம் 18 ஆம் படி அருகே ராஜநாகம் வந்த சம்பவம் ஆச்சிரியத்தையும் நிகழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Tags : The king cobra that was moving during the Navagraha Puja in Sabarimala.