கோவையில் கொடூரம் - மாணவியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை.
கோவை விமான நிலையம் அருகே சட்டக் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் மாணவியின் நண்பரைத் தாக்கி, மாணவியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத, புதர் மண்டிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. காரில் பேசிக்கொண்டிருந்த போது வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், காரின் கண்ணாடியை உடைத்து, ஆண் நண்பரைத் தாக்கி மயக்கமடையச் செய்து பின்னர் மாணவியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்..மயக்கம் தெளிந்த மாணவியின் நண்பர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஒரு பகுதியில் கிடந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியுள்ளனர்.
Tags :



















