செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

by Staff / 14-06-2024 04:55:12pm
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு மீது ஜூன் 19ம் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இந்த முறை ஜாமீன் கிடைத்துவிடும் என திமுகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
 

 

Tags :

Share via