"20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப்" - முதலமைச்சர் ஸ்டாலின்

திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அடிப்படை கல்வி, அதனால்தான் திமுக அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. சமூக நீதி போராட்டங்களின் பிரதிபலிப்புதான் இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு. கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்கப்படும்” என்றார்.
Tags :