யோகா ஆசிரியர் மீது பாலியல் புகார்

by Editor / 07-10-2021 10:03:56am
யோகா ஆசிரியர் மீது பாலியல் புகார்

சிதம்பரம் பூவேந்திரன் என்பவர் யோகா ஆசிரியராக இருந்து வருகிறார். இவர், யோகா கற்றுத் தருவதாகக் கூறி கடந்த 2012ஆம் வருடத்தில் இருந்து யோகா கற்றுக் கொள்ள அவரிடம் வரும் பள்ளி மாணவிகள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள், உள்ளிட்டோரிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியும் அவர்களை ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டும், அந்த பெண்களிடம் இருந்து பணத்தையும் பறித்தும் உள்ளார். என பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், இன்று பூவேந்திரன் பற்றி சென்னை தி.நகர் காவல் துணை ஆணையரிடம் (DC) ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories