பிப்ரவரி 1-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பாஸ் நிறுத்தம்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பாஸ் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நிறுத்தம் செய்ய இருப்பதாக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், வாகன நிறுத்தும் இடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் மாதாந்திர பார்க்கிங் பாஸ் வழங்குவதை நிறுத்த முடிவெடுத்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
Tags : பிப்ரவரி 1-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பாஸ் நிறுத்தம்.