தன்னம்பிக்கையால்தான் சாதித்தேன் இந்திய அழகி ஹர்னாஸ் கவுர் சாந்து

by Editor / 14-12-2021 08:38:59am
 தன்னம்பிக்கையால்தான் சாதித்தேன் இந்திய அழகி  ஹர்னாஸ் கவுர் சாந்து

மிஸ் யுனிவர்ஸ் இறுதிச்சுற்று போட்டியில் அவரிடம்  இளம்பெண்கள் இன்றைய சூழலில் எதிர்கொள்ளும் அழுத்தத்திற்கு எந்த மாதிரியான அறிவுரைகளை வழங்குவீர்கள் என எழுத்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது இதற்கு அவர்  இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் அழுத்தம் என்பது இளம் தலைமுறையினர் தங்களின் தன்னம்பிக்கையை நம்பாதே காரணமென்றும், சுயநம்பிக்கை அவசியம், நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்பதை நம்ப வேண்டும், அதுவே உங்களை அழகாக்கும், மற்றவரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள், உங்களுக்காகவே நீங்கள் பேசுங்கள். ஏனெனில் உங்கள் வாழ்க்கையின் தலைவர் நீங்கள்தான். உங்களுக்காகவே நீங்கள் குரல் கொடுக்க வேண்டியது நீங்கள் தான். நான் என்னை நம்புகிறேன் அதனால் தான் நான் இந்த இடத்தில் வந்து நிற்கிறேன் என தன் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தி அவர் தெரிவித்த கருத்து  மட்டுமே அவரை வெற்றியாளராக அங்கு நிர்ணயம் செய்தது,


 மேலும் மகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது தாய் ரூபி கூறுகையில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.தான் அதனை  பார்க்கவில்லை என்றும் அந்த சமயம் நான் எனது மகள் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து குருத்வாராவில் இருந்தேன், என்று எனது மகள் வெற்றி பெற்றால்தான் வீடு திரும்புவேன், என்றும்  பிரார்த்தித்தேன் என்மகள்  மூன்று பேரில் ஒருவராக வந்துவிட்டதாக எனது பிள்ளைகளை  தகவல் தெரிவித்த உடன் நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு எனது மகள் வெற்றிபெற்றுவிட்டால் என்று கூறியவுடன் என் கண்களை மூடி ஒரு குழந்தை போன்று அழுதேன்,நான் வணங்கும் பாபாஜிக்கு நன்றி தெரிவித்தேன் என அவர்  தெரிவித்தார்,

 

Tags :

Share via