ஆவின் பாக்கெட் பால் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் வியாபாரிகள் அவதி. 

by Editor / 26-02-2023 09:34:41am
ஆவின் பாக்கெட் பால் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் வியாபாரிகள் அவதி. 

தூத்துக்குடி மாநகருக்கு நெல்லை ஆவின் நிறுவனத்தில் இருந்து பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும் கடந்த மூன்று நாட்களாக ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு  ஏற்பட்டு பிற்பகல் 12 மணி ,1 மணி அளவிலேயே பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டன. 

ஆனால் இன்று முற்றிலுமாக தூத்துக்குடி மாநகருக்கு ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகாலை  ஆவின் பால் வாங்க கடைகளில் வாங்க வந்த பொதுமக்கள் ஆவின் பால் கிடைக்காததை தொடர்ந்து அவதிக்குள்ளாயினர் தனியார் நிறுவன பால்களை வாங்கிச் சென்றனர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவின் பால் கிடைக்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளிடம் இருந்து ஆவின் நிறுவனம் முறையாக பால் கொள்முதல் செய்யாததே இந்த ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு காரனம் என கூறப்படுகிறது.

 கடந்த 20 ஆண்டுகளில் தூத்துக்குடி மாநகரில் ஆவின் பால் கடைகளில் விற்பனைக்கு வராமல் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை  என வியாபாரிகள் கூறினர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories