by Admin /
02-07-2023
11:06:31am
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
கோவில்பட்டி அருகே கலைஞர் நூற்றாண்டு விழா - மக்கள் நல திட்டங்களா? திராவிட கொள்கைகளா? தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி பட்டிமன்றம் - அமைச்சர் கீதாஜீவன் -எம்.எல்.ஏ மார்கண்டேயன் உள்ளிட்டோர் பங்கேற்பு..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் திண்டுக்கல் ஐ .லியோனி பங்கேற்று மக்கள் நலத்திட்டங்களா திராவிட கொள்கைகளா என்ற தலைப்பில் மாபெரும் பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பட்டிமன்றத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்து மக்கள் நலத்திட்டங்களையும் திராவிட கொள்கைகளையும் எடுத்துரைத்த பேச்சாளர்கள் பட்டிமன்றத்தினை கண்டு ரசித்தனர்..
இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் பேரூராட்சி தலைவர் திமுக ஒன்றிய செயலாளர்கள்,தொண்டர்கள் ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்டிமன்றத்தினை கண்டு ரசித்தனர்..
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
Tags :
Share via