தடுப்பூசி போட்ட டாக்டருக்கு நேர்ந்த கதி

by Staff / 21-09-2022 12:19:15pm
தடுப்பூசி போட்ட டாக்டருக்கு நேர்ந்த கதி

இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் யூஜின். இவர் வீட்டில் வளரும் நாய்க்கு திடீரென்று வெறிபிடித்து யூஜினின் மனைவியை கடித்துள்ளது. உடனே இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு யூஜின் தகவல் தெரிவித்தார். அதன்படி, அவரது வீட்டுக்கு வந்த மருத்துவர் ஜெய்சன் ஜார்ஜ், வெறிபிடித்த நாய்க்கு தடுப்பூசி போட்டார். அப்போது அந்த நாய், மருத்துவரையும் கடித்து குதறியது. இதையடுத்து அந்த நாய் கால்நடை துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் நாய் கடித்ததால் காயமடைந்த மருத்துவர் ஜெய்சன் ஜார்ஜ் மற்றும் யூஜினின் மனைவி ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

 

Tags :

Share via
Logo