திருமணத்திற்கு மறுத்த பெண் கத்தியால் குத்தி கொலை

பெங்களூரைச் சேர்ந்த எடியூரில் கிரீஷ் (35) என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரிதா கானம் என்ற பெண்ணிற்கும் நட்பு ஏற்பட்டது. கொல்கத்தாவைச் சேர்ந்த அப்பெண்ணிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரை இழந்த நிலையில் மசாஜ் செண்டரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 30) பரிதா கானத்திடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கிரீஷ் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கிரீஷ், போலீசில் சரணடைந்தார்
Tags :