அஜித்குமார் வழக்கு.. மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் மரண வழக்கு, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையம், அஜித்குமார் வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், இது குறித்து விசாரணை நடத்தி, 6 வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப்பிரிவு ஐஜி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :



















