மாமனார், மாமியாரை கொடூரமாக கொன்ற மருமகன்

by Editor / 03-07-2025 03:24:41pm
மாமனார், மாமியாரை கொடூரமாக கொன்ற மருமகன்

உ.பி: லக்னோவைச் சேர்ந்த ஜக்தீப் சிங் (42) என்பவரின் மனைவி பூனம் தேவி கடந்த 2 வருடங்களாக அவரது தாயார் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் தன் வீட்டிற்கு வருமாறு பூனம் தேவியிடம் ஜக்தீப் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு பூனம் தேவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜக்தீப் தனது மாமனார் அனந்த்ராம் (80) மற்றும் மாமியார் ஆஷா தேவி (75) ஆகியோரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஜக்தீப் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via