741 தமிழ் எழுத்துகளைக் கொண்டு வரைந்த திருவள்ளுவர் ஓவியம் 

by Editor / 24-07-2021 06:14:45pm
741 தமிழ் எழுத்துகளைக் கொண்டு வரைந்த திருவள்ளுவர் ஓவியம் 

 

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து இன்றைய தமிழ் எழுத்துகள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துகளைக் கொண்டு ஒவியர் கணேஷ் தான் வரைந்த  திருவள்ளுவர் ஓவியத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்- அதைக் கண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வள்ளுவம் போல் இந்த திருவள்ளுவர் ஓவியமும் வாழும் என ஓவியர் கணேஷை பாராட்டியுள்ளார்.
சமூக வலைதளப் பதிவில் கணேஷ் என்ற ஓவியக் கலைஞர் தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து தமிழ் எழுத்து என கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து இன்றைய தமிழ் எழுத்துகள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துகளைக் கொண்டு தான் வரைந்த அய்யன் திருவள்ளுவர் ஓவியத்தை பதிவிட்டிருந்தார்.


ஓவியர் கணேஷ் ஓவியத் திறமையைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக  முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.
 

""அன்பின் வழியது உயிர்நிலை" என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும் என  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via