இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரூக்கு27%இடஒதுக்கீடு உச்ச நீதி மன்றத்தீர்ப்பு
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரூக்கு27%இடஒதுக்கீடு செல்லும் உச்ச நீதி மன்றத்தீர்ப்பு .இது குறித்து தமிழக முதலமைச்சர் மு்க ஸ்டாலின் விடுத்த அறிக்கை
முதுநிலை மருத்துவப்படிப்புகளில் அகில இந்தியத்தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில்,இதர
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது செல்லும்என்று உச்சநீதிமன்றம்
அளித்துள்ள தீர்ப்பைப்பாராட்டி வரவேற்கிறேன்.கடந்த பல ஆண்டுகாலமாக திராவிட முன்னேற்றக்கழகம்,
அரசியல் களத்திலும் நீதிமன்றங்களிலும் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் விளைவாக,முதல் முறையாக
டுஅகில இந்தியத்தொகுப்பு இடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது சமூகநீதியைப்பற்றிய புரிதலும்ஆழமான பற்றுதலும் கொண்ட திராவிடமுன்னேற்றக்கழகத்திற்கும்
,தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி!சமூகநீதி வரலாற்றில் முக்கியமான மைல்கல்!
இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்த சமுதாயத்தைச்சேர்ந்த4,000 மாணவர்கள்,ஒவ்வோர் ஆண்டும்இதன்
மூலம் தங்களுடைய உரிமையை,பலனைப்பெறுவார்கள்.நாடுமுழுவதும் உள்ள கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட
மக்களின் நலனுக்காக,உச்சநீதிமன்ற வழக்கில் தன்னையும்இணைத்துக்கொண்டு,வாதிட்டு வென்றஇயக்கம்
தி.மு.கஎன்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.தமிழ்நாட்டில் த.மு.கவும்சமூகநீதியின்பால் பற்றுக்கொண்ட
இயக்கங்களும் நடத்திய போராட்டம்.இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையைப்
பெற்றுத்தந்திருக்கிறது.மண்டல் குழுப்பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்குத்தமிழ்நாடு ஆற்றிய பங்களிப்புக்கு
ஈடானது இந்த வெற்றி!
Tags :