திமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது- நடிகர் எஸ்வி சேகர் அதிரடி பேட்டி

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது என்று நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். திமுக அரசை தேவையில்லாமல் விமர்சனம் செய்ய வேண்டாம். விமர்சிப்பவர்கள் செய்வது வெறும் வெற்று அரசியல் தான் என கூறியுள்ளார்.
Tags :