நாம் தமிழர் கட்சி திருச்சி தொகுதி வேட்பாளர் அறிவிப்பு

by Staff / 25-02-2024 03:02:19pm
நாம் தமிழர் கட்சி திருச்சி தொகுதி வேட்பாளர் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் திருச்சி தொகுதி வேட்பாளராக 'ஜல்லிக்கட்டு ராஜேஷ்' போட்டியிடுவார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் இனம் சாராத எத்தனையோ அமைச்சர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றனர். நான் நிராகரிக்கப்பட்ட இதுவரை தேர்தலில் வாய்ப்புக் கிடைக்காத சமூகத்தினரை தேடித் தேடி வாய்ப்பு கொடுக்கின்றேன். அதற்கு சாதியை கேட்டுத்தான் ஆக வேண்டும். மக்களவை தேர்தலின் நான் போட்டியிடப்போவதில்லை. நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றார்.

 

Tags :

Share via