ஐஐடி மாணவர் தற்கொலை.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

by Editor / 19-09-2026 11:23:46am
ஐஐடி மாணவர் தற்கொலை.. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

மும்பை ஐஐடி பாம்பேயில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வில் காப்பி அடித்தாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மாணவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக தகவல் வெளியாகியுள்ளது. “மாணவரின் மரணத்துக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும், கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் மனநல பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo