முதன்முதலாக பச்சை பூஞ்சை  நோயால் மும்பையில் ஒருவர் பாதிப்பு

by Editor / 16-06-2021 05:53:48pm
 முதன்முதலாக பச்சை பூஞ்சை  நோயால் மும்பையில் ஒருவர் பாதிப்பு

 


இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினசரி தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை இரண்டாயிரத்திலேயே நீடித்து வருகிறது.
இதனிடையே, கறுப்பு, வெள்ளை பூஞ்சைகளின் பாதிப்பு அதிகளவில் பரவத்தொடங்கியது. இந்த வகைப் பூஞ்சைகள், மனிதர்களின் உடல் பாகங்களை அதிகளவில் பாதிக்கின்றன. இந்தப் பயத்திலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள், அடுத்ததாக 'பச்சை பூஞ்சை' எனும் நோய்த்தொற்று தலைதூக்கியுள்ளது.முக்கியமாக இணைநோய்களான சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்களேயே இந்தப் பூஞ்சை நோய் தாக்குகிறது.பச்சை பூஞ்சைநாட்டிலேயே முதன்முதலாக, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 34 வயதுடைய விஷால் என்பவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.இவர் கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், 90 விழுக்காடு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காய்ச்சலும் குறையாமல் இருந்துள்ளது.இதனால் சந்தேகமடைந்த ஸ்ரீ அரவிந்தோ மருத்துவ அறிவியல் கழகத்தின் தலைவர் டாக்டர் ரவி தோசி, விஷாலுக்கு கறுப்பு பூஞ்சை சோதனை செய்துள்ளார். இந்த சோதனையில் விஷாலுக்கு, 'பச்சை பூஞ்சை நோய்' இருப்பது தெரிய வந்துள்ளது.கறுப்புப் பூஞ்சையைக் காட்டிலும் கொடிது!இந்த நோய் கறுப்பு பூஞ்சை நோயிலிருந்து மாறுப்பட்டது என இந்தூர் நகர சுகாதார துறையின் மாவட்ட தரவு மேலாளர் அபூர்வா திவாரி உறுதி செய்துள்ளார். நாட்டில் முதல்முறையாக இந்த பாதிப்பு இருப்பது தற்போதுதான் கண்டறியப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via