அம்மா கிளினிக் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 1 வருடம் மட்டுமே அனுமதிவழங்கியதாக மா.சு. தகவல்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையின் புதிய கட்டட திறப்பு விழாவில் உரையாற்றிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அம்மா கிளினிக் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 1 வருடம் மட்டுமே அனுமதி வழங்கியதை அறியாமல் திமுக அரசை குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸில் சுற்றுலா செல்வதுபோல் நடுவழியில் இறங்கி புளி, முருங்கைக்காய், வேர்க்கடலை போன்றவை எப்படி விளையும் என விவசாயிகளிடம் கேட்டு வருகிறார்" என விமர்சித்துள்ளார்.
Tags : அம்மா கிளினிக் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 1 வருடம் மட்டுமே அனுமதிவழங்கியதாக மா.சு. தகவல்.