அதிமுக பாஜக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி- இ.கம்யூ.மாநிலச் செயலாளர் முத்தரசன்.

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்தார்.கடந்த மாதம் 25ஆம் தேதி டெல்லியில் கட்சி அலுவலகத்தை பார்வையிட சென்றதாக கூறி அமித்ஷாவிடம் இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.அதன் பின்னர் அவரை சந்தித்து அரசியல் பேசவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செங்கோட்டையன், தம்பிதுரை, சி.வி சண்முகம் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து மிரட்டி,உருட்டி அடிபணிய வைத்து இன்று பாஜக அதிமுக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனை அதிமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.ஏனெனில், பாஜக தமிழகத்திற்கு எதிரான கட்சி, தொகுதி சீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது அந்த கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளவில்லை. அதில் அதிமுக பங்கேற்றது.
அதேபோல் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக்கூறி தமிழகத்தின் கல்வி நிதி 2500 கோடியை நிறுத்தி வைத்துள்ளது.இதனை பாஜக அரசு விடுவிக்க வேண்டுமென அதிமுக கோருகிறது.அதேபோல் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் நான்காயிரம் கோடி அளவுக்கு வேலை செய்த பணத்தை ஒதுக்கவில்லை அதனை ஒதுக்க வேண்டும் என அதிமுக கோருகிறது. தற்போது வக்பு வாரிய மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளது.இதனை அதிமுக திரும்ப பெற வேண்டுமென கூறுகிறது.
இப்படி பாஜகவுக்கு எதிராக அதிமுக தனது நிலைப்பாட்டை எடுத்தாலும், தற்சமயம் இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து விட்டதாக அறிவிக்கப்படுகிறது.தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிச்சாமி மீதும் அவரது மகன் மீதும் சம்மந்தி மீதும்,நண்பர்கள் மீதும், கட்சியின் மீதும், கட்சி சின்னத்தின் மீதும் வழக்குகள் உள்ள நிலையில்,வழக்கு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி அதிமுகவை பாஜக அடிபணிய வைத்துள்ளது எனவே இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. இதனால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நடைபெறப் போவதில்லை என தெரிவித்தார்.
Tags : அதிமுக பாஜக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி- இ.கம்யூ.மாநிலச் செயலாளர் முத்தரசன்.