மசாஜ் சென்டரில் அதிரடி....... 7 பேர் கைது

by Staff / 21-11-2023 03:55:01pm
மசாஜ் சென்டரில் அதிரடி....... 7 பேர்  கைது

கோவை மாவட்டம் சரவணம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் மசாஜ் சென்டர்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. சில இடங்களில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டிருந்த நிலையில். புகாரின் பேரில், போலீசார் மசாஜ் சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தி கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சரவணம்பட்டி பகுதியில் மூலை, முடுக்கெல்லாம் மசாஜ் சென்டர்கள் உள்ளன.

இந்நிலையில், நேற்று நாமக்கல்லை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர் சத்தி ரோடு சிவானந்தபுரத்தில் உள்ள காம்ப்ளக்சில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டருக்கு சென்றார். அப்போது அங்கிருந்த மேலாளர் இங்கு நிறைய வடமாநில இளம்பெண்கள் உள்ளனர். நீங்கள் ஆசைப்பட்டால் அவர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என கூறினார்.

இது குறித்து அந்த வாலிபர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு மசாஜ் பெயரில் பாலியல் தொழிலில் இளம்பெண்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மசாஜ் சென்டர் மேலாளர் லால் பகதூர்(25) மற்றும் மணிப்பூர், நாகலாந்தை சேர்ந்த 6 இளம்பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories