முன்னாள் அமைச்சா் பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்கிற தீர்ப்புக்கு விலக்கு
முன்னாள்அமைச்சா் பொன்முடி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையால் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது ..இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு மூன்று ஆண்டும் அவருடைய துணைவியார் விசாலாட்சிக்கு மூன்று ஆண்டும் ஜனவரி 22ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியதோடு மேல்முறையீடு செய்ய ஒரு மாத அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது.. அதன் அடிப்படையில் , ஜனவரி 22ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்கிற தீர்ப்புக்கு விலக்களித்தது உச்ச நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
Tags :