1ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா, மாஹே புதுச்சேரி  மாநிலங்களில் கடுமையான கனமழை பெய்யும்

by Admin / 01-11-2024 12:12:44pm
 1ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா, மாஹே புதுச்சேரி  மாநிலங்களில் கடுமையான கனமழை பெய்யும்

நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 2 ம் தேதி வரை  தமிழ்நாடு, கேரளா,தெற்கு கர்நாடகா உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும்  .தமிழகம், புதுச்சேரி ,கேரளா காரைக்கால், மாஹே ஆகிய இடங்களில் கன மழைக்கான  ஆரஞ்சு எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கர்நாடகா உள் பகுதிகளில் பெய்து வருவதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய கிழக்கு இந்தியாவில் சில பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு இயல்பை விட அதிகமான வெப்பநிலை தொடர்ந்து காணப்படும் என்றும் டெல்லியில் நவம்பர் 1 முதல் 3 வரை காலை -இரவு நேரங்களில் புகை மூட்டத்துடன் கூடிய லேசானபனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் நவம்பர் 4 வரை கேரளா , மாஹே வில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் புதுச்சேரி தமிழ்நாடு காரைக்காலில் நவம்பர் 1 முதல் 3 வரை இதே போன்ற வானிலை நிலவும் என்றும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா, மாஹே புதுச்சேரி  மாநிலங்களில் கடுமையான கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..

 

 

Tags :

Share via

More stories

Logo