பாஜக தலைவர் அண்ணாமலை டங்ஸ்டன் ஆதரவாக கருத்து தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது - பி.ஆர் பாண்டியன்
மதுரை மேலூர் அருகே அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று இங்குள்ள சமண சின்னங்கள் குடைவரைக் கோயில்கள் உள்ளிட்ட பகுதிகளை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர் பாண்டியன் நேரில் பார்வையிட்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் பொழுது நில ஒருங்கிணைப்பு சட்டத்தோடு பொருந்துமா என உரிய விளக்கத்தோடு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
விவசாயிகளை சமாதானப்படுத்தும் வகையில் மட்டுமே என தீர்மானம் நிறைவேற்றக்கூடாது. உரிய சட்ட திருத் திருத்தங்கள் கூடிய வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.இத்திட்டத்தை பாராளுமன்ற கூட்டத்தொடருக்குள்ளாகவே மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும்.
டங்ஸ்டனுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை டங்ஷனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வர வேண்டும்
என தெரிவித்தார்...
Tags : பாஜக தலைவர் அண்ணாமலை டங்ஸ்டன் ஆதரவாக கருத்து தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது - பி.ஆர் பாண்டியன்