உடல்நலக்குறைவால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

நிலக்கோட்டை அருகில் உள்ள பழைய சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் சுகந்தகுமார்(42). இவர் சவுதியில் சமையல் மாஸ்டராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், நிகிலேஷ்(17) , பாலையா(15) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.நிகிலேஷ் நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அவரது தாய் கதவை திறந்து பார்த்தபோது தனது மகன் இறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :