பொதுமக்களை தாக்கிய சிறுத்தை

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் மாவட்டத்தில் பொதுமக்களை சிறுத்தை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனம் அருகே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் மொத்தம் 13 பேர் சிறுத்தை தாக்கி காயம் அடைந்தனர். அவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அம்மாவட்ட எஸ்.பி மோகன்லால் மீனா தெரிவித்துள்ளார். ஆனால் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Tags :