கூகுள் ஊழியர்கள் வீட்டிலிருந்து  பணிபுரிந்து வருவதால் ரூ.7,400 கோடி சேமிப்பு

by Editor / 24-07-2021 03:52:28pm
கூகுள் ஊழியர்கள் வீட்டிலிருந்து  பணிபுரிந்து வருவதால் ரூ.7,400 கோடி சேமிப்பு


2021-ம் ஆண்டில் முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ள கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், சென்ற ஆண்டு 1 பில்லியன் டாலர்( 7,409 கோடி ரூபாய்) வரை சேமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் பயணம், பொழுதுபோக்கு, வசதிகள் போன்றவற்றின் செலவு பெரும் அளவில் கூகுள் மற்றும் ஆல்பாபெட்டுக்கு குறைந்துள்ளது. 


வரும் காலத்தில் ஊழியர்களுக்குக் கலப்பு எதிர்கால வேலை செய்யும் முறை குறித்துத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.இதன் படி எதிர்காலத்தில், வீட்டிலிருந்து சில நாட்கள், அலுவலகத்திலிருந்து சில நாட்கள் பணிபுரியும் முறையைக் கூகுள் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via