தமிழக அரசு 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு.

by Editor / 07-11-2021 02:00:40pm
தமிழக அரசு 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து  உத்தரவு.

தமிழக அரசின் பல்வேறு துறை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் பணியில் இருந்த அமுதா, அண்மையில் மாநில பணிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு புதிதாக பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
தொழில்துறையின் முதன்மை செயலாளராக இருந்த முருகானந்தம், நிதித்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதைப்போல தொழில்துறையின் கூடுதல் முதன்மை செயலாளராக கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் முதன்மை செயலாளராக இருந்த கோபால், போக்குவரத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனோ, நீர்வளத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.போக்குவரத்து துறை கூடுதல் முதன்மை செயலாளராக இருந்த தயானந்த் கட்டாரியா, பொதுத்துறை கூடுதல் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எரிசக்தி துறை செயலாளராக ரமேஷ் சந்த் மீனாவும், கைத்தறித்துறை முதன்மை செயலாளராக தர்மேந்திர பிரதாப் யாதவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதைப்போல, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளராக செல்வி அபூர்வாவும், நில சீர்திருத்த துறை முதன்மை செயலாளராக பீலா ராஜேசும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


 

 

Tags :

Share via