நாகர்கோவிலில் போதைப்பொருட்கள் விற்பனைதட்டிக்கேட்டவர் தக்கப்பாட்டார்.

by Editor / 11-12-2022 10:16:16am
நாகர்கோவிலில் போதைப்பொருட்கள் விற்பனைதட்டிக்கேட்டவர் தக்கப்பாட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இடலாக்குடி பகுதியில் சமீப நாட்களாக கஞ்சா மட்டும் போதை பொருட்களின் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. பெண்கள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் செல்லும் பகுதிகளில் இது போன்ற விற்பனை நடைபெறுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் எனவே இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் அமைப்பு மாநில துணைத்தலைவர் அப்துல் ரகுமான் கோட்டார் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் அவர் வீடு திரும்பி கொண்டிருந்தபோது கும்பல் ஒன்று அவரை சரமாரியாக தாக்கியது இதனால் படுகாயம் அடைந்த அப்துல் ரகுமான் நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

 

Tags :

Share via

More stories

Logo