நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனு -நாளை விசாரணை ஒத்திவைப்பு.

by Writer / 24-01-2022 05:56:36pm
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரிய மனு -நாளை விசாரணை ஒத்திவைப்பு.

தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில்,தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

 

கொரோனா தொற்று தற்போது  உச்சத்தில் இருப்பதாலும்,தேர்தல் நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்டும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். 

 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டை தான் அணுக வேண்டும். கொரோனா 2-வது அலை உடன் ஒப்பிடும்போது தற்போதைய நிலவரம் மோசமாக இல்லை என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடலாம் என சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

 

மேலும் மாநில தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது, அதனை தேர்தலை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் கொரோனா 3வது அலை தீவிரமாவதால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via