அனில் அம்பானி வீட்டில் ED சோதனை

by Editor / 24-07-2025 12:44:48pm
அனில் அம்பானி வீட்டில் ED சோதனை

தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் மோசடி செய்துள்ளதாக எஸ்பிஐ அளித்துள்ள புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மகராஷ்டிராவின் மும்பை மற்றும் தலைநகர் டெல்லி அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள அனில் அம்பானியின் வீட்டிலும் இந்த சோதனை நடக்கிறது. சகோதரர்களான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் தனித்தனியாக தொழில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via