38 வயது பெண்ணுடன் 19 வயது இளைஞர் ஓட்டம்

ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக 38 வயது பெண் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே கல்லூரியில் பி.டெக் படித்த 19 வயது மாணவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அப்பெண், கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில் மாணவருடன் வீட்டை விட்டு சென்றார். மாணவரை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில், உண்மை அம்பலமான நிலையில் பெங்களூருவில் இருந்த இருவரையும் போலீசார் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
Tags :