சென்னை விமான நிலையத்தில் 3கி தங்கம் பறிமுதல்

by Editor / 11-09-2021 11:06:52am
சென்னை விமான நிலையத்தில் 3கி தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்திற்கு வரும் விமானங்களில் பெருமளவு கடத்தல் தங்கம் வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கொண்ட 3 தனிப்படை நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனர்.

துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நாடுகளில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான 14 பேரை நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினார்கள். அவா்களின் உடைமைகளை சோதனை செய்ததில் திருச்சியை சேர்ந்த சின்ன ராசு(38), ராமநாதபுரத்தை சோந்த முகமது ஜுப்பிலிகான் (35) ஆகிய 2 பயணிகளின் டிராலி டைப் சூட்கேஸ்களில் ரகசியமாக வைத்து தங்கக்கட்டிகளை மறைத்து கடத்தி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேரின் சூட்கேஸ்களிலும் 30 தங்கக்கட்டிகள் இருந்தன. ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சந்தேகத்தில் நிறுத்தி வைத்திருந்த மற்ற பயணிகளை சோதனையிட்டதில் ஒரு சிலரிடம் மட்டும் மிகக்குறைந்த அளவில் தங்கம் இருந்தது. அந்த தங்கத்திற்கு சுங்கத்தீா்வை விதித்து அனுப்பி வைத்தனா்.3 கிலோ கடத்தல் தங்கக்கட்டிகளுடன் பிடிபட்ட சின்னராசு, முகமது ஜுப்பிலிகான் ஆகியோரை மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

 

Tags :

Share via