2 போலி பத்திரிகையாளர்கள் கைது.

by Staff / 27-09-2025 12:06:52pm
2 போலி பத்திரிகையாளர்கள் கைது.

திண்டுக்கல் மாவட்ட  அரசு அலுவலகங்கள் ஆட்சியர் அலுவலகம் மற்றும் தொழிலதிபர்களிடம்  திருப்பூர் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் என்று சொல்லி 5க்கும் மேற்பட்டவர்கள் தனித்தனி குழுக்களாக வசூல்  வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வந்த புகாரையடுத்துதற்போது மேற்கு காவல் நிலையத்தில் திருப்பூரை சேர்ந்த போலி பத்திரிகையாளர்கள்  அரசு அலுவலகங்களில் தீபாவளி வசூல் செய்ததாக புகாரின் அடிப்படையில் தற்போது துணைக் கண்காணிப்பாளர் விசாரணை செய்ததில்  பத்திரிகையாளர் என்ற போர்வையில் வசூலில் ஈடுபட்ட 2 போலி பத்திரிகையாளர்கள் கைது. இந்த 2 பேரில் திருப்பூர் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் 2019 ஆண்டு பவித்திரன் மீது இருசக்கர வாகன திருட்டு நிலுவையில் உள்ளது. திருப்பூர் நகரம் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் முருகபாண்டி மீது கடத்தல் மற்றும் வழிப்பறி வழக்கு ஒன்றும் அடிதடி வழக்கு ஒன்றும் 2023-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags : 2 போலி பத்திரிகையாளர்கள் கைது.

Share via