பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் கைது
பொள்ளாசி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். அரசு பள்ளி மாணவி ஒருவர் தான் பயிலும் பள்ளியில் 12 ,ம் வகுப்பு பாடம் நடத்தும் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரனும் இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணனும் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் புகார் அளித்தார். இது குறித்து மாணவியிடம் விசாரணை நடத்திய குழந்தைநல குழுவினர் ஆசிரியர்கள் மீது கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன்பேரில் ஆசிரியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags :