சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் - ஆளுநர் ஒப்புதல் தரவில்லை அமைச்சர் பொன்முடி
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சுதந்திரப் போராட்ட வீரர் சங்கர் ஐயாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை பல்கலைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.ஆனால் ஆளுநர் அதற்கு இன்னும் ஒப்புதல் தரவில்லை. தமிழ்நாட்டு சுதந்திர வீரர் மீது அக்கறை உள்ளது போல் பேசுகின்ற ஆளுநர், சங்கர் ஐயாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க உடனே ஒப்புதல் தர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்
Tags :