2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்துவது குறித்து முதல்வர் ஆலோசனை.

திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று (செப் 9) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு வியூகத்தின் கீழ், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுடன் விவாதிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியில் 30% உறுப்பினர்களை திமுகவில் இணைக்கவும், அதற்கான வியூகத்தை செயல்படுத்தவும் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்படஉள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும்
இந்த கூட்டத்தில் 2025ம் ஆண்டுக்கான முப்பெரும் விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. திமுக தொடங்கப்பட்ட நாள், பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் மாதத்தில் வருகிறது. திமுகவின் 75 ஆண்டு கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், அதேபோல சென்னை YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக விழா ஏற்பாடு செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்துவது குறித்து முதல்வர் ஆலோசனை.