தலைமை தேர்தல் அதிகாரி தூத்துக்குடி வருகை; ஆட்சியர் வரவேற்பு!

by Staff / 14-05-2024 05:08:42pm
தலைமை தேர்தல் அதிகாரி தூத்துக்குடி வருகை; ஆட்சியர் வரவேற்பு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர்/அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி தலைமையில், தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார். இதனையொட்டி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழக தலைமைத் தேர்தல் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி, புத்தகம் வழங்கி வரவேற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக. பாலாஜி சரவணன் உடனிருந்தார்.

 

Tags :

Share via