4 லட்சம் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வு - ஐநா
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 7-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அந்நகரை விமானம் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காசாவிற்குள்ளே 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலியால் பாதுகாப்பான இடங்களில் பாலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ளனர். பெரும்பாலான மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி கிடையாது. விவசாய கிணறுகளில் உள்ள உவர் நீரை மக்கள் பருகுவதால் நீரினால் பரவும் நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது
Tags :











messi 121tamilnews.jpg)







