தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சாலையோர வியபாரிகள் கலக்கம்.

by Editor / 27-10-2021 05:30:59pm
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சாலையோர வியபாரிகள் கலக்கம்.
தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 31 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித அல்லது கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த  48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, கேரள கடலோரப் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்  பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் கன மழை  அறிவிப்பு தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள சமயத்தில் சாலையோர சில்லறை துணி விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Tags :

Share via