கடையநல்லூரில் நாட்டு வெடிகுண்டு மற்றும் நாட்டு துப்பாக்கி பறிமுதல் - நான்கு பேர் கைது.

by Staff / 10-06-2025 11:31:15pm
கடையநல்லூரில் நாட்டு வெடிகுண்டு மற்றும் நாட்டு துப்பாக்கி பறிமுதல் - நான்கு பேர் கைது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பசு மாடானது கடையநல்லூர் பகுதியில் உள்ள பால்பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, அந்தத் தோட்டத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டை பசுமாடானது கடித்ததில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறி பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

 இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக முருகன் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, முதற்கட்ட விசாரணையில் பால்பாண்டி என்பவர் தான் பன்றியை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்தது தெரியவந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, பால்பாண்டியுடன் அவரது சகோதரர் சந்தனபாண்டி மற்றும் கரிசல்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுபாஷ், செங்கோட்டை பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராம்ஜி ஆகிய நான்கு பேரும் வேட்டைக்கு செல்வது தெரியவந்த நிலையில், அவர்கள் நான்கு பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்களிடம் நாட்டு வெடிகுண்டு மற்றும் நாட்டு துப்பாக்கி இருந்தது தெரிய வரவே அவர்கள் நான்கு பேரையும் கைது செய்த போலீசார் நாட்டு துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : கடையநல்லூரில் நாட்டு வெடிகுண்டு மற்றும் நாட்டு துப்பாக்கி பறிமுதல் - நான்கு பேர் கைது.

Share via