மார்ச் 10 முதல் டிக்கெட்

by Staff / 08-03-2023 12:16:44pm
 மார்ச் 10 முதல் டிக்கெட்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் மார்ச் 10ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என ஆந்திர கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் மார்ச் 10 முதல் பேடிஎம் மற்றும் மார்ச் 13 முதல் ஆஃப்லைனில் விற்கப்படும். டிக்கெட் விலை ரூ.600, ரூ.1500, ரூ.2000, ரூ.3000, ரூ.3500 மற்றும் ரூ.6000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன் டிக்கெட்டுகள் விற்கப்படும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo