ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவி

by Staff / 08-03-2023 12:30:02pm
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவி

ஆப்கானிஸ்தானுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. ஈரான் துறைமுகம் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன. தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கன் வந்த பிறகு கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் உரிமை போன்ற பல்வேறு குழப்பமான சூழல்கள் நிலவி வருகின்றன.

 

Tags :

Share via

More stories

Logo